கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை இரத்தினக் கற்கள்
30 ஆவணி 2023 புதன் 14:24 | பார்வைகள் : 9793
சட்டவிரோதமான முறையில் இரத்தினக் கற்களை இந்தியாவுக்கு கடத்த முற்பட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது இன்று (30) அதிகாலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
விமான நிலையத்தில் புறப்படும் முனையத்தில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக தெரியவருகிறது.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரத்தினக் கற்களின் பெறுமதியானது சுமார் 291 மில்லியன் ரூபா ஆகும்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.





திருமண பொருத்தம்
இன்றைய ராசி பலன்


















Bons Plans
Annuaire
Scan