Paristamil Navigation Paristamil advert login

கீரிப்பிள்ளையும் கொக்கும்

கீரிப்பிள்ளையும் கொக்கும்

2 ஆடி 2024 செவ்வாய் 11:03 | பார்வைகள் : 831


ஒரு நதிக்கரை ஓரத்துல ஒரு கொக்கும் அதோட மனைவியும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க.

அவுங்க ஒவ்வொரு முறையும் முட்ட போட்டு குட்டி கொக்கு வரும்னு காத்துக்கிட்டிருந்தப்ப எல்லாம் ஒரு கருப்பு பாம்பு அந்த முட்டையை திண்ணிடும்.
இதப்பாத்த அந்த கொக்குகளுக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு,எப்ப முட்ட போட்டாலும் இந்த பாம்பு வந்து இத திண்ணுடுத்தேன்னு ரொம்ப கவலைப்பட்டுச்சுங்க.
அப்பத்தான் அங்க வாழ்ந்துகிட்டு வந்த ஒரு புத்திசாலி நண்டு நான் உங்களுக்கு உதவுறேன்னு சொல்லுச்சு,அந்த கொக்குங்க கிட்ட ஒரு யோசனை சொல்லுச்சு.

அந்த யோசனைப்படி சின்ன சின்ன மீன்களை பிடிச்சு பக்கத்துல வாழுற கீரிப்பிள்ளை வசிக்கிற வலை வாசல்ல போட்டுச்சுங்க.

காலையில எழுந்த அந்த கீரிப்பிள்ளை அடடா இந்த மீன்கள் எப்படி வந்துச்சுனு யோசிச்சிகிட்டே அந்த மீன்களை சாப்பிட்டுச்சு.

இதப்பாத்த அந்த கொக்கு தங்களோட திட்டம் சரியா நடக்கிறதா சந்தோச பட்டுச்சுங்க , மறுநாள் நிறைய மீன்களை கொண்டுவந்து கீரிப்பிள்ளையோட வலைல இருந்து அந்த பாம்பு வசிக்கிற புத்து வரைக்கும் போட்டுச்சு.

இத பாத்த கீரிப்பிள்ளை அந்த மீன்களை சாப்பிட்டுக்கிட்டே மெல்ல மெல்ல அந்த பாம்பு இருக்குற புத்துக்கு வந்துச்சு.

இந்த புத்துல இருந்துதான் மீன் வருதான்னு பாத்துச்சு அந்த கீரிப்பிள்ளை.

அப்பத்தான் தூக்கத்துல இருந்து எந்திரிச்ச பாம்பு வெளிய வந்துச்சு,அந்த கீரிய பாத்ததும் அதிர்ச்சியான அந்த கருப்பு பாம்பு அதுகூட சண்ட போட்டுச்சு

பாம்பும் கீரியும் சண்ட போடுறத அந்த கொக்கும் நண்டும் பாத்துகிட்டு இருந்துச்சுங்க,அப்பத்தான் அந்த கீரி அந்த பாம்ப கொன்னு போட்டுச்சு 

அப்பாடா பாம்பு செத்துடுச்சு இனிமே நம்மளுக்கு எந்த ஆபத்தும் இல்லனு அந்த கொக்கு ரெண்டும் ரொம்ப சந்தோச பட்டுச்சுங்க 

ஆனா மறுநாள் பாத்தா அந்த மரத்துல ஏறி முட்டைகளை அந்த கீரி சாப்பிட்டுகிட்டு இருந்துச்சு 

இந்த கதைல இருந்து நாம என்ன தெரிச்சுகிட்டம்னா நமக்கு ஆபத்து வந்தா எதிரிகள நாமதான் சமாளிக்கணும் அப்படி இல்லாம இன்னொருத்தர சார்ந்து இருந்தம்னா நமக்கு தான் ஆபத்து 

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்