இலங்கையில் புதிய வகை பெற்றோல் அறிமுகம்

2 ஆடி 2024 செவ்வாய் 13:04 | பார்வைகள் : 4192
லங்கா ஐஓசி நிறுவனம் 100 ஒக்டேன் ரக பெற்றோலை இன்று (02) சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அமைச்சர் தனது X கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனத்தின் தலைவர்கள் குழுவொன்று தம்மை சந்தித்து கலந்துரையாடியதாக அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை ஐஓசி எரிபொருள் நிலைய விஸ்தரிப்புத் திட்டம், மசகு எண்ணெய் சந்தை, எண்ணெய் தாங்கி வளாக அபிவிருத்தி, எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் உத்தேச இந்தியா-இலங்கை எரிபொருள் குழாய்த்திட்டம் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.