'தளபதி 68' படத்தில் இருந்து ஜோதிகா வெளியேறினாரா?

30 ஆவணி 2023 புதன் 15:07 | பார்வைகள் : 8095
'தளபதி 68’ படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.விஜய் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தந்தை மகன் என்ற இரண்டு வேடத்தில் தந்தை ஜோடியாக ஜோதிகா. மகன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்த இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஜோதிகா இந்த படத்தில் நடிக்க முடியாத நிலையில் இருப்பதால் அவருக்கு பதில் வேறு நடிகையை படக்குழுவினர் பரிசீலனை செய்து வந்ததாகவும் தற்போது சிம்ரன் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2000-ம் ஆண்டு விஜய் ஜோடியாக 'பிரியமானவளே’ என்ற திரைப்படத்தில் சிம்ரன் நடித்த நிலையில் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் ’தளபதி 68’ படத்தில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025