பரிஸ் : வழமைக்கு மாறாக மிகக்குறைந்த அளவு மழைவீழ்ச்சி பதிவு..!

2 ஆடி 2024 செவ்வாய் 16:16 | பார்வைகள் : 13323
பரிசில் கடந்த ஜூன் மாதத்தில் வழமைக்கு மாறாக மிகக்குறைந்த அளவில் மழைவீழ்ச்சி பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் ஒன்றில் பரிசில் பதிவாகும் சராசரி மழை வீழ்ச்சியை விட, 20% சதவீதம் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது. ஜூன் மாதத்தில் மொத்தமாக 34.7 மில்லிமீற்றர் மழை (ஒரு சதுர மீற்றருக்கு 35 லிட்டர் மழை வீதம்) பதிவானது.
இதே ஜுன் மாதத்தில் அதிகூடிய வெப்பமாக 31.1°C மற்றும் மிகக்குறைந்த வெப்பமாக 9.6°C பதிவாகியுள்ளது.
அத்தோடு, 213 மணிநேரங்களும் 5 நிமிடங்களும் சூரிய வெளிச்சம் இருந்ததாகவும், இது சராசரியை விட 5% சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025