வலதுசாரிகளின் பெரும்பான்மையை உடைக்க - போட்டிகளில் இருந்து விலகிக்கொள்ளும் வேட்பாளர்கள்..!

2 ஆடி 2024 செவ்வாய் 18:11 | பார்வைகள் : 11916
தீவிர வலதுசாரிகளின் பெரும்பான்மையை தகர்க்க, மக்ரோனது மறுமலர்ச்சி கட்சியும், இடதுசாரி கூட்டணி கட்சிகளும் (Nouveau Front populaire) இணைந்து செயற்பட்டு வருகிறது. இதற்காக 218 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து பின்வாங்கியுள்ளனர்.
பிரெஞ்சு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான இறுக்கமான ஒரு சூழ்நிலை நிலவுகிறது. தீவிர வலதுசாரியான Rassemblement National கட்சி பெரும்பான்மை (289 ஆசனங்கள்) பெறுவதை தவிர்ப்பதற்காக) 218 வேட்பாளர்கள் தங்களது போட்டியில் இருந்து விலகிக்கொண்டுள்ளனர்.
577 தொகுதிகளில் 289 ஆசனங்களை பெற்றால் பெரும்பான்மை பெற்றுவிடலாம் எனும் நிலையில், அந்த பெரும்பான்மையை Rassemblement National கட்சி பெற்றுவிடாமல் தவிர்ப்பதர்காக மேற்படி அரசியல் தந்திரோபாய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025