Paristamil Navigation Paristamil advert login

டொனால்டு ட்ரம்புடனான விவாதம்.. ஜோ பைடனின் பரிதாப நிலை

டொனால்டு ட்ரம்புடனான விவாதம்.. ஜோ பைடனின் பரிதாப நிலை

3 ஆடி 2024 புதன் 07:44 | பார்வைகள் : 1260


கடந்த வாரம் டொனால்டு ட்ரம்புடன் நடந்த காரசார விவாதத்தில் தூங்கிப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டதாக ஜோ பைடனே ஒப்புக்கொண்டுள்ளார்.

குறித்த விவாதத்தை அடுத்தே, ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்தது.

பிரபலமான பல பத்திரிகைகள் ஜோ பைடனின் நிலையை பரிதாபம் என குறிப்பிட்டுள்ளது.

ஜோ பைடன் கட்சிக்கு ஆதரவான பத்திரிகைகளும், அவர் போட்டியில் இருந்து விலகுவதே முறையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளன.

தற்போது, டொனால்டு ட்ரம்புடனான முதல் விவாதத்தில் தாம் தூங்கிப் போனதாக ஒப்புக்கொண்ட ஜோ பைடன், தமது சிறப்பு குழுவினரின் ஆலோசனைகளை தாம் நிராகரித்ததாகவும், மேடையில் தூங்கிப் போகும் நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த விவாதம் நடைபெறுவதற்கு முன்னர் தாம் சில நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்ததாகவும், அதுவும் ஒரு காரணம் என குறிப்பிட்டுள்ளார். 

ட்ரம்புடனான நேரலை விவாதத்திற்கு முன்னர் ஜோ பைடன் முக்கிய நிகழ்வுக்கு தயாராக கேம்ப் டேவிட்டில் இருந்தார்.

அதற்கு முன்னர் G7 உச்சி மாநாட்டிற்காக ஜூன் 14ம் திகதி இத்தாலி புறப்பட்டு சென்றார். 

இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு காரணம் அல்ல, ஆனால் ஒரு விளக்கம் என்றும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமது ஆதரவாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட ஜோ பைடன், அடுத்த தேர்தலில் தாம் வெற்றி பெறுவது முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். 


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்