கோபா அமெரிக்க தொடர் - காலிறுதிக்குள் நுழைந்த பிரேசில்
3 ஆடி 2024 புதன் 07:50 | பார்வைகள் : 1138
கோபா அமெரிக்க தொடரில், கொலம்பியா அணிக்கு எதிரான போட்டியை பிரேசில் டிரா செய்து காலிறுதிக்கு முன்னேறியது.
லீவிஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் பிரேசில் - கொலம்பியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 12வது நிமிடத்திலேயே பிரேசில் (Brazil) அணிக்கு Free Kick வாய்ப்பு கிடைத்தது.
அந்த அணியின் ராபின்ஹா (Raphinha) அடித்த ஷாட் எதிரணி வீரர்களின் தடுப்பு அரணை தாண்டிச் சென்று கோலாக மாறியது.
19வது நிமிடத்தில் கொலம்பியா (Colombia) அணிக்கு ஒரு கோல் கிடைத்தது. ஆனால் அது Offside என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 45+2வது நிமிடத்தில் கொலம்பியா வீரர் டேனியல் முனோஸ் (Daniel Munoz) மின்னல் வேகத்தில் செயல்பட்டு கோல் அடித்தார்.
இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கடும் நெருக்கடி கொடுத்து ஆடியதால் மேற்கொண்டு கோல்கள் விழவில்லை. இதனால் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.
இதன்மூலம் மொத்தம் 5 புள்ளிகளை பெற்ற பிரேசிலும், 7 புள்ளிகள் பெற்ற கொலம்பியாவும் காலிறுதிக்கு தகுதி பெற்றன.