RATP : ஒலிம்பிக் போட்டிகளுக்காக தலைவர் பதவியில் நீடிக்கும் Jean Castex ..!

3 ஆடி 2024 புதன் 08:18 | பார்வைகள் : 10649
RATP போக்குவரத்து நிறுவனத்தின் தலைவராக உள்ள Jean Castex இன் பதவிக்காலம் இம்மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு அவரது பதவிக்காலம் நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
RATP இன் தலைவராக சென்ற 2022 ஆம் ஆண்டு நவம்பரில் ஜனாதிபதி இம்மனுவல் மக்ரோன் பரிந்துரை செய்திருந்தார். அதை அடுத்து அவர் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டார். தற்போது மீண்டும் அவரையே தலைவராக நியமிப்பதற்கு மக்ரோன் மீண்டும் பரிந்துரை செய்துள்ளார். எவ்வாறாயினும் அது தொடர்பில் செனட் மேற்சபையே முடிவுகளை எடுக்க வேண்டும்.
இந்நிலையில், இம்மாதம் 26 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதை அடுத்து, அவரே தொடர்ந்தும் தலைவராக தொடருவார் என அரசு அறிவித்துள்ளது. இன்று ஜூலை 3 ஆம் திகதி எலிசே மாளிகையில் இருந்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
’இரண்டாம் தவணையாகவும் Jean Castex தலைவராக பரிந்துரைக்கிறேன்!’ என கடந்த ஜூன் 3 ஆம் திகதி ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்திருந்தார்.