கொழும்பில் 67ஆவது மாடியில் இருந்து விழுந்து 2 மாணவர்கள் மரணம்!
3 ஆடி 2024 புதன் 10:33 | பார்வைகள் : 12657
கொம்பனித்தெருவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்து 15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தில் வசிக்கும் மாணவனும், மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவனும் மாணவியும் கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் கல்வி பயின்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan