Paristamil Navigation Paristamil advert login

ஓட்ஸ் தோசை

ஓட்ஸ் தோசை

3 ஆடி 2024 புதன் 12:00 | பார்வைகள் : 1040


உங்க வீட்ல தோசை மாவு இல்லையா?அப்போ இன்னைக்கு காலையில என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? கவலை வேண்டாம் உங்களுக்கான பதிவு தான் இது. ஐந்தே நிமிடத்தில் இன்ஸ்டன்ட் தோசை மாவை வீட்டிலேயே செய்யலாம் தெரியுமா..? ஆம், உங்கள் வீட்டில் ஓட்ஸ் இருந்தால், சத்தான ஓட்ஸ் தோசை செய்யுங்கள். இந்த ஓட்ஸ் தோசை சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும்.

குறிப்பாக, எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த ஓட்ஸ் தோசை ரொம்பவே நல்லது. ஏனெனில், ஓட்ஸ் உடலுக்கு ஆற்றலை அதிகம் வழங்குவதோடு மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும். சரி வாங்க... இப்போது இந்த பதிவில், ஓட்ஸ் தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

ஓட்ஸ் தோசை செய்ய தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1/2 கப்
அரிசி மாவு - 1/4 ஸ்பூன்
ரவை - 1/4 கப்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொபடியாக நறுக்கியது)
துருவிய இஞ்சி - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொபடியாக நறுக்கியது)
தயிர் - 1/4 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
கருவேப்பிலை - சிறிதளவு (பொபடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிதளவு (பொபடியாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
ஓட்ஸ் தோசை செய்ய முதலில், எடுத்துவைத்த ஓசை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரித்து எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் எடுத்து வைத்த சீரகம், அரிசி மாவு, ரவை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, துருவி இஞ்சி, தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர் ஆகியவற்றை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலக்கி, சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

இதனை எடுத்து அடுப்பில் தோசை கையை வைத்து அதன் நன்கு சூடானதும் எண்ணையை தடவி கரைத்து வைத்துள்ள மாவை தோசை வடிவில் வட்டமாக ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு தோசையைச் சுற்றி எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அப்போதுதான் தோசை மொறுமொறுப்பாக வரும். தோசை இரண்டு பக்கம் நன்றாக வெந்ததும் அது அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள். அவ்வளவுதான் சத்தான ஓட்ஸ் தோசை ரெடி.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்