Yvelines : மூவர் மீது கத்திக்குத்து தாக்குதல்..!

3 ஆடி 2024 புதன் 14:15 | பார்வைகள் : 8091
Bois-d'Arcy (Yvelines) நகரில் நேற்று இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.
16, 18 மற்றும் 22 வயதுடைய மூவரே கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர். Avenue Jean-Jaurès வீதியில் இருந்து இரவு 11 மணி அளவில் அவசரப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். அங்கு மூவர் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் தரையில் கிடந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
தாக்குதலுக்குரிய காரணம் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1