La France Insoumise கட்சியுடன் கூட்டணி இல்லை! - மக்ரோன் திட்டவட்டம்!
3 ஆடி 2024 புதன் 17:24 | பார்வைகள் : 11754
La France Insoumise கட்சியுடன் கூட்டணி இல்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இன்று ஜூலை 3 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில், ஜனாதிபதி மக்ரோன் இதனைத் தெரிவித்தார். தீவிர இடதுசாரி கட்சியான Jean-Luc Mélenchon இன் கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கப்போவதில்லை என அவர் தெரிவித்தார். தீவிர வலதுசாரி Rassemblement national கட்சியின் வாக்குகளை உடைப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் கூட்டணி சாத்தியமில்லை என அவர் தெரிவித்தார்.
இதே கருத்தை முன்னதாக இன்று காலை பிரதமர் கப்ரியல் அத்தாலும் குறிப்பிட்டிருந்தார். ‘La France Insoumise கட்சியில் இருந்து என்னை அனைத்தும் பிரிக்கிறது.. அதனுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்!’ என கப்ரியல் அத்தால் தெரிவித்திருந்தார்.


























Bons Plans
Annuaire
Scan