பரிசில் இருந்து வெளியேற்றப்பட்ட 200 அகதிகள்..!
3 ஆடி 2024 புதன் 18:22 | பார்வைகள் : 16088
பரிசில் இருந்து 200 வரையான அகதிகள் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஜூலை 3, இன்று புதன்கிழமை இந்த வெளியேற்றம் இடம்பெற்றுள்ளது. 19 ஆம் வட்டாரத்தில் உள்ள கலாச்சார நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்ட Maison des métallos அரங்க வளாகத்தில் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த அகதிகளே வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதற்கட்டமாக உடற்பயிற்சிக் கூடம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் நாட்டின் பல்வேறு அகதிமுகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.
200 பேர் வெளியேற்றப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan