Paristamil Navigation Paristamil advert login

வலதுசாரியத்துக்கு எதிராக பரிசில் ஆர்ப்பாட்டம்.. !!

வலதுசாரியத்துக்கு எதிராக பரிசில் ஆர்ப்பாட்டம்.. !!

4 ஆடி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 7634


வலதுசாரி கட்சிகளுக்கு எதிராக பரிசில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஜூலை 3, மாலை 6 மணி அளவில் Place de la République பகுதியில் ஒன்றினைந்த பல நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரான்சில் அதிகரித்துள்ள வலதுசாரி சிந்தனைக்கு எதிராகவும், கட்சிகளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பொது தேர்தலில் வலதுசாரி கட்சிகள் பெரும்பான்மை பெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் முக்கியமான நிகழ்வாக பதிவாகியுள்ளது. ஜனநாயக சிந்தனைக்கு எதிராக அவர்களது செயற்பாடுகள் இருப்பதாகவும், இது பிரான்சுக்கு ஏற்பட்ட அவமானம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் Rassemblement national கட்சிக்கு ஆதரவு அளிக்கவேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இரவு 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வந்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்