Paristamil Navigation Paristamil advert login

ரோபோவிற்குள் மனித மூளை உயிரணுக்கள்.... விஞ்ஞானிகளின் புதிய முயற்சி

ரோபோவிற்குள் மனித மூளை உயிரணுக்கள்.... விஞ்ஞானிகளின் புதிய முயற்சி

4 ஆடி 2024 வியாழன் 07:52 | பார்வைகள் : 1268


ரோபோவின் உடலில் மனித மூளை உயிரணுக்களை பொருத்தி சீன ஆராய்ச்சியாளர்கள் குழு வடிவமைத்துள்ளது.

தியான்ஜின் பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ரோபோவின் உடலில் ஸ்டெம் செல்களை இணைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவைச் சேர்ந்த இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, மனித ஸ்டெம் செல்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய ஆர்கனாய்டை ஒன்று சிறிய ரோபோவின் உடலில் தற்போது பொருத்தியுள்ளது. 

இதன்மூலம் அந்த ரோபோ சில பணிகளை எவ்வாறு முடிப்பது என்பதை கற்றுக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. 

மேலும் மனித மூளையின் திசுவானது நரம்பு இடைமுகத்துடன் இணைக்கப்பட்டு, மனித உருவ ரோபோவை இயக்க கட்டளைகளை வழங்க உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்திசாலித்தனமான ரோபோ ஒன்று ''உலகின் முதல் திறந்த மூல மூளை On Chip நுண்ணறிவு சிக்கலான தொடர்பு அமைப்பு'' ஆக மாறியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

தென் சீனா மார்னிங் போஸ்ட் செய்தியின்படி, ''மனித மூளை ஆர்கனாய்டுகள் உயிருள்ள மூளையில் இடமாற்றம் செய்வது ஆர்கனாய்டு வளர்ச்சியாகும். செயல்திறனை மேம்படுத்த இது ஒரு புதுமையான முறையாகும்'' என தெரிவித்துள்ளது.   

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்