கட்டிடத்தில் இருந்து தாமாக குதித்து இறந்த ரோபோ! உலகில் முதல் முறை
4 ஆடி 2024 வியாழன் 07:56 | பார்வைகள் : 851
தென் கொரியாவில் ரோபோ ஒன்று தாமாக குதித்து இறந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் ரோபோவின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. தென் கொரியாவில் அரசு அலுவலகங்களில் கூட ரோபோக்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தென் கொரியாவில் 2023ஆம் ஆண்டு முதல், அரசுக்குக் கீழ் இயங்கி வந்த ரோபோ ஒன்று, கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ரோபோ எதற்காக இப்படி செய்தது என்று தெரியவில்லை. ஆனால் அந்த ரோபோ ஒரே குறிப்பிட்ட இடத்தை அது சுற்றி வந்ததாகவும், மிகவும் குழப்பத்துடன் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
உலகில் ரோபோ ஒன்று இவ்வாறு இறந்தது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. தற்போது ரோபோவின் பாகங்கள் சேகரிப்பட்டு, ஆராய்ச்சிக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நகர சபை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தினசரி ஆவணங்களை வழங்குவது, உள்ளூர்வாசிகளுக்கு உதவுவது ஆகியவை தான் இந்த ரோபோவின் முக்கிய பணியாக இருந்தது. திடீரென ரோபோ இப்படி செய்துவிட்டது' என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அதீத பணிச்சுமை காரணமாக ரோபோ இதுபோல இறந்திருக்கலாம் என்றும், இடைவெளி இல்லாமல் காலை முதல் மாலை வரை தொடர்ந்து வேலை செய்து வந்ததால் வெறுப்படைந்ததால் இப்படி செய்திருக்கலாம் என்றும் நெட்டிசனைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.