இலங்கையில் சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களால் ஆபத்து
4 ஆடி 2024 வியாழன் 14:47 | பார்வைகள் : 1644
சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களை பயன்படுத்துவதால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேசிய வைத்தியசாலையின் தோல் சிகிச்சை நிபுணர் வைத்தியர் இந்திரா கஹவிட்ட இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள வைத்தியர்,
உலக சுகாதார ஸ்தாபனமும் இலங்கை சுகாதார அமைச்சுக்கும் இடையில் முகத்தை வெண்மையாக்கும் கிறீம்களில் பாதரசத்தின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு கூட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் பாதரசத்தின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதாகும்.
பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம் கலந்த கிறீம்கள் உடல் முழுவதும் பயன்டுத்தப்படுகின்றன. இது ஆபத்தானது. பாதரச நச்சால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.
"24 மணி நேரத்தில், நான் கிட்டத்தட்ட 60 நோயாளிகளை பரிசோதித்தேன். அதில் 10 வீதமானோர் வெண்மையாக்கும் கிறீம்களினால் ஏற்படும் பிரச்சனைகளுடன் வந்தனர். இவை நீண்ட காலமல்ல, குறுகிய கால பிரச்சினை. இப்போது நான் சில விஷயங்களைப் பார்க்கிறேன். உதாரணத்திற்கு, உள்ளங்கைகளின் உள்ளங்கால் கறப்பு நிறமாக மாறுகிறது. அனைத்திற்கும் பொதுவான காரணி வெள்ளையாக்கும் கிறீம்கள் ஆகும். மேலும், நகங்கள் பழுப்பு நிறமாக... ஆரஞ்சு நிறமாக மாறும். இவை முன்பை விட அதிகமாக காணப்படுகின்றன. குறுகிய கால பக்க விளைவுகள் அதிகரித்து வருகின்றன. புற்றுநோய்க்கு முன் சிறுநீரகங்கள் மோசமடைந்து உயிர் சேதமும் ஏற்படுகிறது" என தெரிவித்துள்ளார்.