காசாவில் போர் தீவிரம் - 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி
5 ஆடி 2024 வெள்ளி 06:51 | பார்வைகள் : 3195
பாலஸ்தீனம் நாட்டின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் சுமார் 38,011 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
87,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் போரினால் பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகளும், ஐ.நா.வும் அமைதிப் பேச்சு வார்த்தை, போர் நிறுத்தத்தை முன்மொழிதல் என பல முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை அனைத்திலும் தோல்வியடைந்துள்ளன.
அதை உறுதிப்படுத்தும் வகையில் பாலஸ்தீன நகரங்களான காசா மற்றும் ரஃபாவில் பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
கடந்த 24 மணித்தியாலயத்தில் 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காசா நகரின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.