"இனவெறி மற்றும் யூத-விரோத கருத்துக்கள் எம்மிடமும் உண்டு" Jordan Bardella (RN
5 ஆடி 2024 வெள்ளி 08:20 | பார்வைகள் : 5483
பிரான்ஸ் அரச தொலைக்காட்சியான France 2 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய 'Rassemblement National' கட்சியின் தலைவர் Jordan Bardella "நாங்கள் 48 மணிநேரத்தில் 600 வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட தேர்வு செய்தோம், அனைவருமே தரமான, உயர்வான வேட்பாளர்கள் மக்களுக்கு பணி செய்வதே அவர்களின் நோக்கம்" என தெரிவித்தார்.
"அப்போ உங்கள் கட்சியில் இனவெறி மற்றும் யூத-விரோத கருத்துக்கள் வருகிறதே, நீங்கள் இன்னும் FN கட்சியின் தாக்கத்தில் தான் இருக்கிறீர்கள் RN என்பது வெறும் வெளி மாற்றம்தானா?" என கேட்கப்பட்ட தொகுப்பாளரின் கேள்விக்கு பதில் அளித்த Jordan Bardella.
"முதலில் உங்களின் குறித்த கருத்தை நான் நிராகரிக்கிறேன்" என தெரிவித்தார். தொடர்ந்து பதிலளித்த Bardella " நான்கோ ஐந்து பேர் அப்படியான இனவெறி மற்றும் யூத-விரோத கருத்துக்களை தெரிவித்து இருக்கலாம் மற்றயவர்கள அனைவருமே மிகவும் தரமான, உயர்வான வேட்பாளர்கள்" என தெரிவித்ததுடன், "மற்றைய கட்சிகளில் இதைவிடவும் மோசமான கருத்துக்களை கொண்டவர்கள் இல்லையா?" என கேள்வியெழுப்பினார்.