இலங்கையில் கோர விபத்து - நால்வர் பலி - மூவர் படுகாயம்
5 ஆடி 2024 வெள்ளி 08:58 | பார்வைகள் : 12148
பதுளையில் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சொரனாதோட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) நண்பகல் 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொனராகலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் வீதி நிர்மாணப் பணிகளுக்காக சென்ற போது விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan