கூகுளை விட 10 மடங்கு தகவல்., புதிய கருவியுடன் அசத்தும் இஸ்ரோ
5 ஆடி 2024 வெள்ளி 09:20 | பார்வைகள் : 1233
Geoportal-Bhuvan என்ற புவிசார் இணையதளம் மூலம், தகவல் பரப்பும் திறனை மேம்படுத்துவதில், இஸ்ரோ (ISRO) பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது.
இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத், சமூக தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த கருவி, உலக தேடுபொறி நிறுவனமான கூகுளை விட 10 மடங்கு விரிவான தகவல்களை பயனர்களுக்கு வழங்குகிறது என்று சமீபத்தில் வெளியிட்டார்.
விவசாயம், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற பல துறைகளில் பயனுள்ள தகவல்களை இந்த ஜியோபோர்ட்டல் பூவன் வழங்குகிறது என்றார்.
இந்தக் கருவியைத் தவிர, Bhuvan-Panchayat மற்றும் NDEM (National Data Base for Emergency Management) ஆகிய இரண்டு புதிய கருவிகள் தகவல் கிடைப்பதையும் பயன்பாட்டையும் அதிகரிக்க அறிமுகப்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
புவன்-பஞ்சாயத்து கருவியானது சிறந்த தரவு தொகுப்புகள் மற்றும் பகுப்பாய்வுக் கருவிகளை வழங்குவதன் மூலம் உள்ளூர் நிர்வாக அமைப்புகளை மேம்படுத்துவதை ஆதரிக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், விரிவான புவிசார் தரவுகளின் அடிப்படையில் கிராம பஞ்சாயத்துகள் சிறந்த முடிவுகளை எடுக்க இந்த கருவி உதவும் என்றும் கூறப்படுகிறது.