Paristamil Navigation Paristamil advert login

நாளை பிரான்சில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலின் நிலைப்பாடுகள் என்ன?

நாளை பிரான்சில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலின் நிலைப்பாடுகள் என்ன?

6 ஆடி 2024 சனி 08:56 | பார்வைகள் : 3145


பிரான்சின்  நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை 30/06 முதல் சுற்றாகவும்  நாளை 07/07 இரண்டாவது சுற்றாகவும் நடைபெற உள்ளது. முக்கோண வடிவிலான போட்டியாக இந்த நாடாளுமன்றத்  தேர்தல் அமைந்திருக்கிறது. 'Radio France' மற்றும் 'France Télévisions' நடத்திய கருத்துக் கணிப்பு நேற்றைய தினம் கடைசியாக வெளிவந்தது.

அதில் 'Rassemblement National' கட்சியினர் 175 முதல் 205 ஆசனங்களை பெறுவார்கள் என்றும், 'Nouveau Front populaire' கட்சியினர் 145 முதல் 175 ஆசனங்களை பெறுவார்கள் என்றும், ஆழும் கட்சியான 'camp présidentiel' 'Ensemble' 118 முதல் 148 ஆசனங்களை பெறுவார்கள் என்றும் அந்தக் கருத்துக்கணிப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்தான் நாளைய வாக்களிப்பு பிரான்சில் நடைபெற உள்ளது. பிரான்ஸ் முழுவதும் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் ஏறத்தாழ 49 மில்லியன் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏற்கனவே வெளிநாடுகளில் வாழ்கின்ற 410000 பிரஞ்சு மக்கள் இணைய தளத்தின் மூலமாக வாக்களித்துள்ளனர், 3300000 மக்கள் தாங்கள் இல்லாத இடத்தில் மற்றும் ஒருவர் வாக்களிக்கும் முறையான 'procuration' முறையை நாடியிருக்கிறார்கள் எனவும் தெரியவருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்