Paristamil Navigation Paristamil advert login

 இந்திய அணியை 12 ரன்னில் வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா

 இந்திய அணியை 12 ரன்னில் வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா

6 ஆடி 2024 சனி 08:52 | பார்வைகள் : 3836


மகளிர் இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

சேப்பாக்கத்தில் மகளிர் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது.

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் குவித்தது. டஸ்மின் பிரிட்ஸ் 56 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்கள் விளாசினார். 

மரிசன்னே கப் 33 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் எடுத்தார். ராதா யாதவ் மற்றும் பூஜா வஸ்திரேக்கர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் எடுத்ததால், தென் ஆப்பிரிக்க அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்திய அணியின் தரப்பில் ஜெமிமா ரோட்ரிகாஸ் ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் குவித்தார்.

ஸ்ம்ரிதி மந்தனா (Smriti Mandhana) 30 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் எடுத்தார்.


ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை முழுமையாக இழந்த தென் ஆப்பிரிக்க அணி இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு பதிலடி கொடுத்துள்ளது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்