கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வாய்வு பணி ஆரம்பம்

6 ஆடி 2024 சனி 09:26 | பார்வைகள் : 4796
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியானது நேற்றுமுன்தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பிற்பகல் இரண்டு மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தொல்லியல் திணைக்களத்தினர், காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுளந்த மற்றும் பணிப்பாளர் ஜெ.தற்பரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், மனித உரிமைகள் சட்டத்தரணிகளான எஸ்.ரட்ணவேல், ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன் மற்றும் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.
அகழ்வு நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாக நேற்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற அகழ்வு பணிகளுக்கு முன்னாயத்தமான நடவடிக்கைகளே நேற்றுமுன்தினம்மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, நிதி ஒதுக்கீடு காலம் தாழ்த்தப்பட்டதன் காரணமாக தாமதம் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட பகுதி தவிர்ந்த ஏனைய மனித எலும்புக்கூடு இருக்கும் பகுதி என அடையாளம் காணப்பட்ட இடங்கள் துப்புரவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1