Paristamil Navigation Paristamil advert login

தலைமுடியில் டீ பாத்திரமாக வடிவமைத்த சிகை அலங்கார பெண்! 

தலைமுடியில் டீ பாத்திரமாக வடிவமைத்த சிகை அலங்கார பெண்! 

6 ஆடி 2024 சனி 10:03 | பார்வைகள் : 4019


ஈரான் நாட்டை சேர்ந்த சிகை அலங்கார பெண் நிபுணர், ஒரு இளம்பெண்ணின் தலைமுடியில் டீ பாத்திரம் வடிவமைத்து அதில் தண்ணீர் ஊற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தை வைரலாகி வருகின்றது. 

ஆனால் இதுவரை நீங்கள் கண்டிராத வகையில் தலைமுடியை நிஜமான டீ பாத்திரமாக வடிவமைத்து ஈரான் சிகை அலங்கார நிபுணர் சயிதே அரியாய் அசத்தியிருக்கிறார்.

முதலில் டீ பாத்திர வடிவில் சிறு கம்பிகளை வளைத்து தலையில் நிறுத்துகிறார். அதைச் சுற்றி தலைமுடியை சேர்த்து வைத்து ஒட்டுகிறார். 

இறுக்கம் தேவையான இடத்துக்கு ஜடை பின்னி கட்டி விடுகிறார். இறுதியில் டீ பாத்திர வடிவம் வந்ததும் அதில் தண்ணீரையோ அல்லது ஆறிய டீயையோ ஊற்றி மற்றொரு பாத்திரத்திலும், டீ கோப்பையிலும் நிரப்பிக் காட்டுகிறார். 

பானம் தலையில் வேறு எந்த இடத்தின் வழியாகவும் கசியாமல், பாத்திரத்தின் வாய் வழியாக மட்டும் அழகாக வெளியேறுகிறது.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் 36 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். பலரும் இந்த சிகையலங்காரத்தை வியந்து கருத்து பதிவிட்டனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்