அமெரிக்காவில் சாலையில் வந்த பறக்கும் தட்டு கார்
6 ஆடி 2024 சனி 10:26 | பார்வைகள் : 3404
பறக்கும் தட்டு வடிவ கார் சாலையில் வந்ததை கவனித்த பொலிஸார் அதை மறித்து சோதனை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பின்னர் செல்பி எடுத்துக் கொண்ட வீடியோ காட்சியும் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி உள்ளது.
அமெரிக்காவின் ஒக்லகாமா நகரில் நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார் அந்த பொலிஸ்காரர்.
அப்போது பறக்கும் தட்டு வடிவில் ஒரு கார் வருவதை அறிந்து மறித்தார். நியூ மெக்சிகோ நகரில் பறக்கும் தட்டு தொடர்பான திருவிழா நடைபெற இருப்பதாகவும், அங்கு செல்வதற்காக இந்த கார் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து அனுமதியை சரிபார்த்த அவர், செல்பி எடுத்துக் கொண்டு பறக்கும் தட்டு கார் செல்ல அனுமதித்தார்.
இதுபற்றிய பதிவை வலைத்தளத்தில் பொலிசார் வெளியிட்டனர். அது வைரலாக பரவியது.