அயோத்தியை போல் குஜராத்திலும் பா.ஜ.,வை தோற்கடிப்போம்: ராகுல் சபதம்

6 ஆடி 2024 சனி 11:07 | பார்வைகள் : 5740
அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.,வை தோற்கடித்தது போல், குஜராத்திலும் பா.ஜ.,வை தோற்கடிப்போம்' என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: கடவுளுடன் எனக்கு நேரடி தொடர்பு உள்ளது என பிரதமர் மோடி கூறுகிறார். லோக்சபா தேர்தலில் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ., ஏன் தோல்வியடைந்தது.ராமர் கோயில் கட்ட வேண்டும் என அத்வானி ரத யாத்திரை நடத்தினார். பிரதமர் மோடி அவருக்கு உதவினார். ராமர் கோயில் திறப்பு விழாவில், அதானி, அம்பானி ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் ஏழைகள் யாரும் பங்கேற்க அனுமதியில்லை.
தோற்கடிப்போம்
அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.,வை தோற்கடித்தது போல் குஜராத்திலும் பா.ஜ.,வை தோற்கடிப்போம். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி பைசாபாத் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவர் தோற்கடிக்கப்படுவார். அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும் என அவரது அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர் பைசாபாத் தொகுதியில் போட்டியிடவில்லை.
இழப்பீடு வழங்கவில்லை
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, ஏழை மக்களிடம் இருந்து ஏராளமான நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளது. இன்று வரை நரேந்திர மோடி அரசு அவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இரண்டாவதாக, விவசாயிகளின் நிலத்தில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டது. அவர்களுக்கு உரிய இழப்பீடு கூட வழங்கப்படவில்லை. இது மக்களை கொதிப்படையச் செய்தது.
பயப்பட வேண்டாம்
அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியடைந்ததற்கும், இண்டியா கூட்டணி வெற்றி பெறுவதற்கும் இவையே காரணம். குஜராத்தில் எங்கள் அலுவலகத்தை பா.ஜ.,வினர் அடித்து நொறுக்கி, எங்கள் ஊழியர்களைத் தாக்கியுள்ளனர். இப்போது காங்கிரசார் யாருக்கும் பயப்பட வேண்டாம். இவ்வாறு ராகுல் பேசினார்.
வீடியோ வெளியிட்டு ராகுல் வருத்தம்
கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ரயில் ஓட்டுநர்களை சந்தித்தது தொடர்பாக, வீடியோ ஒன்றை ராகுல் எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் கூறியிருப்பதாவது: நரேந்திர மோடியின் ஆட்சியில் தெருவோர வியாபாரிகள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். ஒரு நாள் சம்பளத்தில் நான்கு நாட்கள் தங்கள் குடும்பத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் ஒரு பைசா கூட சேமிக்காமல் வாழ்க்கையை கழிக்கின்றனர்.
ஜிடிபி நகரில் தெருவோர வியாபாரிகள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை நெருக்கமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எதிர்கால இந்தியாவை உருவாக்குபவர்களின் குடும்பங்கள் ஆபத்தில் உள்ளன. தொழிலாளர்களுக்கு அவர்களின் முழு உரிமைகள், பாதுகாப்பு மற்றும் மரியாதையை வழங்குவேன். இது எனது தீர்மானம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
மணிப்பூர் செல்கிறார் ராகுல்
காங்கிரஸ் எம்.பி., ராகுல், நாளை மறுநாள் (ஜூலை 8) மணிப்பூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓராண்டுக்கு மேலாக அங்கு நீடித்துவரும் கலவரத்தால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை ராகுல் சந்தித்து பேச இருக்கிறார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1