Moulin Rouge கேளிக்கை விடுதியின் காற்றாடி திறந்துவைக்கப்பட்டது..!

6 ஆடி 2024 சனி 13:48 | பார்வைகள் : 6290
பரிசில் உள்ள பிரபல கேளிக்கை விடுதியான Moulin Rouge இன் காற்றாடி முறிந்து விழுந்து சேதமடைந்திருந்தமை அறிந்ததே. இந்நிலையில், அதன் காற்றாடி மீண்டும் அமைக்கப்பட்டு, திறந்துவைக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை அந்த காற்றாடி திறந்துவைக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி அந்த சிவப்பு நிற பிரபலமான காற்றாடி உடைந்து விழுந்திருந்தது. அத்தோடு காற்றாடியின் கீழ் அமைக்கப்பட்டிருந்த நியோன் மின்குமிழ்களினாலான the Moulin Rouge எனும் எழுத்திகளில் சிலவும் உடைந்து விழுந்திருந்தன.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் இரு வாரங்கள் உள்ள நிலையில், நேற்று ஜூலை 5 ஆம் திகதி மாலை பல நூறு சுற்றுலாப்பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்பாக அந்த காற்றாடிகள் திறந்துவைக்கப்பட்டன.