போட்டியில் இருந்து விலக மாட்டேன் - அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பு..!

6 ஆடி 2024 சனி 15:43 | பார்வைகள் : 6761
நான் அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றும் போட்டியிலிருந்து விலக மாட்டேன் என்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் ஜோ பைடன் மற்றும் டிரம்ப ஆகிய இருவருக்கும் நடந்த விவாதத்தில் ஜோ பைடன் விவாதம் செய்ய திணறினார் இதை அடுத்து அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக ஜனநாயக கட்சியின் சார்பில் நிறுத்தப்படுவார் என்று செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் ஜோ பைடன் தரப்பு இதற்கு பதிலடி கொடுத்துள்ள நிலையில் அதில் 2024 இல் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜோபைடன் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்க மாட்டார் என்றும் ஜோ பைடன் தேர்தல் பிரச்சார குழு மின்னஞ்சல் மூலம் தங்கள் கட்சியின் தலைமைக்கு தெரிவித்துள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025