யாழில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இளம் குடும்பப் பெண்
6 ஆடி 2024 சனி 17:19 | பார்வைகள் : 6481
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
திவிகரன் நிஷானி ஏன்ற 29 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கொழும்புத்துறை ஏவீ வீதி மூன்றாம் ஒழுங்கையில் உள்ள வீட்டிலேயே இன்று இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றது.
சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணின் கணவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கொலைச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan