முதலாம் நெப்போலியனின் துப்பாக்கிகள் ஏலம் விட தடை..!
7 ஆடி 2024 ஞாயிறு 07:13 | பார்வைகள் : 3542
முதலாம் நெப்போலியன் பயன்படுத்திய துப்பாக்கிகள் இரண்டு, இன்று ஜூலை 7, ஞாயிற்றுக்கிழமை ஏலத்துக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
”அது பாதுகாக்கப்படவேண்டிய தேசிய பொக்கிஷம்!’ என கலாச்சார அமைச்சகம் குறிப்பிட்டு, நேற்று சனிக்கிழமை வெளியான அரச வர்த்தமானியில் இந்த துப்பாக்கிகள் ஏலத்துக்கு விடுதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேலைப்பாடுகளுடன் கூடிய மரப்பெட்டி ஒன்றில் ஜோடியாக இந்த துப்பாக்கிகள் இரண்டும் அடுக்கப்பட்டுள்ள நிலையில், அவை 1.2 தொடக்கம் 1.5 மில்லியன் வரையான தொகைக்கு ஏலத்தில் விற்பனையாகும் என கணிக்கப்பட்டிருந்தது.
ஏலத்தில் வெளிநாட்டவர்கள் பலர் கலந்துகொள்வதால், குறித்த துப்பாக்கிகள் பிரான்சில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்லப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இந்த தடையை விதித்துள்ளனர்.
இந்த ஏலம் Fontainebleau (Seine-et-Marne) நகரில் உள்ள Osenat & Rossini நிறுவனத்தினால் ஏலம் விடப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
அதேவேளை, மேற்குறித்த துப்பாக்கிகளில் ஒன்றை பயன்படுத்தியே முதலாம் நெப்போலியன் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.