திருகோணமலையில் சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்
7 ஆடி 2024 ஞாயிறு 07:36 | பார்வைகள் : 1799
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் இராஜவரோதயம் சம்மந்தன் அவர்களின் இறுதி கிரியைகள் ஆரம்பமாகியுள்ளன.
திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று(07) மாலை இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதுடன் பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலித்தியும் வருகின்றனர்.
அரசியல் பிரமுகர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள் என பலரும் திருகோணமலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதி கிரியை நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.
இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், வடகிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என பலரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (30ஆம் திகதி) உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமரர் இரா.சம்பந்தன் இயற்கை எய்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.