அட்லி இயக்கத்தில் கமல்?
7 ஆடி 2024 ஞாயிறு 11:19 | பார்வைகள் : 7125
ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கினார் அட்லி. 1200 கோடிக்கு மேல் அந்த படம் வசூல் செய்தது. அதையடுத்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை அவர் இயக்கப் போவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஹிந்தியில் சல்மான்கான் நடிக்கும் ஒரு படத்தை இயக்கும் பணிகளில் இறங்கியுள்ளார் அட்லி. அதோடு இந்த படத்தில் இன்னொரு நாயகனாக ரஜினிகாந்த் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் அது வதந்தி என்பது தெரிய வந்தது. அதையடுத்து அந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் அது குறித்து இயக்குனர் அட்லி இடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛என் படத்தில் நடிக்க ரஜினி, கமல் ஆகியோரிடத்தில் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அது வெறும் வதந்தி. ஆனால் எதிர்காலத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. அதைத்தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தேன். அதை வைத்து அட்லி இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக செய்தி ஆக்கிவிட்டார்கள்'' என்று ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் அட்லி.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan