Paristamil Navigation Paristamil advert login

மாங்காய் மசாலா சாதம்

மாங்காய் மசாலா சாதம்

7 ஆடி 2024 ஞாயிறு 11:25 | பார்வைகள் : 1055


 மாங்காய் கொண்டு செய்யப்படும் பல்வேறு விதமான ரெசிபிகள் நம்மை மறுபக்கம் ஈர்க்கக்கூடியவையாக இருக்கின்றன. உங்களுக்காகவே இந்த பதிவில் மாங்காய் மசாலா சாதம் எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கடுகு- 1 டேபிள் ஸ்பூன்

வெந்தயம்- 1 டேபிள் ஸ்பூன்

சீரகம்- 1 டேபிள் ஸ்பூன்

மல்லி விதைகள்- 1 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் 8-10

கடலைப்பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்

ஒரு துருவிய மாங்காய்

வேக வைத்த அரிசி

தேவைக்கு ஏற்ப உப்பு

கொத்தமல்லி தழை

தாளிக்க

கடுகு- 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை- ஒரு கொத்து

செய்முறை:

கடாய் ஒன்றில் கடுகு, சீரகம், வெந்தயம், மல்லி விதைகள் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.

பொருட்கள் அனைத்தும் பொன்னிறமாக மாறும் வரை கருகி விடாமல் ட்ரை ரோஸ்ட் செய்து, பின்னர் அவற்றை ஆற வைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

அதே கடாயில் நெய் அல்லது எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

இப்போது கடலைப்பருப்பு பொன்னிறமாக வறுபட்டதும் நாம் அரைத்து வைத்த பொடியை சேர்த்து கிளறி விடவும்.

அடுத்தபடியாக துருவி வைத்த மாங்காய் மற்றும் வேக வைத்த சாதம் ஆகியவற்றை சேர்த்து கிளறுங்கள்.

பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை கிளறவும்.

இறுதியாக தேவையான அளவு பசு நெய் மற்றும் உப்பு சேர்க்கவும்.

கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து மாங்காய் மசாலா சாதத்தை சூடாக பரிமாறவும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்