Paristamil Navigation Paristamil advert login

முத்தத்தால் கேட்கும் திறனை இழந்த இளம் பெண்

முத்தத்தால் கேட்கும் திறனை இழந்த இளம் பெண்

31 ஆவணி 2023 வியாழன் 10:27 | பார்வைகள் : 5489


சீன நாட்டில் 10 நிமிடங்களுக்கு தொடர்ந்து தன் காதலுக்கு லிப்லாக் கொடுத்ததால், அவர் காது கேட்கும் திறனை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சீன நாட்டைச் சேர்ந்த காதலவர்கள் இருவரும் கிழக்கு ஜெஜியாங் என்ற மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்குச் சென்றனர்.

காதலவர்கள் தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ளும்பொருட்டு இருவரும் லிப்லாக் எனும் உதட்டோடு உதடு ஒட்டி முத்தமிட்டனர்.

இந்த முத்தம் இடைவிடாமல் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு நீண்டதாகக் கூறப்படுகிறது.

இதில், காதலியின் காது அடைப்பது போன்ற வலி ஏற்பட்டதாக காதலனிடம் கூறியுள்ளார்.

பின்னர், காதலியின் காது கேட்கும் திறனும் குறைந்ததால் ஒருவரும் மருத்துவர் ஒருவரிடம் சென்று பரிசோதனை மேற்கொண்டனர்.

பரிசோதனையில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, காதிற்குள் காற்றழுத்தால் ஏற்பட்ட மாற்றத்தால் மெல்லிய சவ்வு பகுதியில் 2 துளைகள் ஏற்பட்டதாகக் கூறியதாகவும் இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

முத்தம் கொடுத்ததால் கேட்கும் திறனை யுவதி இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்