பெண் படுகொலை... மகன் கைது..!
8 ஆடி 2024 திங்கள் 14:27 | பார்வைகள் : 10682
கத்தியால் தாக்கப்பட்டு 50 வயதுடைய பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அவருடைய மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பா-து-கலே மாவட்டத்தின் Arras நகரில் இச்சம்பவம் நேற்று முன்தினம் ஜூலை 6, சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. பல்வேறு வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த நிலையில், பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் மீட்டனர்.
இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியாக அப்பெண்ணின் மகன் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் 1994 ஆம் ஆண்டு பிறந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பெண் கொல்லப்பட்டதோடு அவரது வளர்ப்பு நாயும் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்குரிய காரணங்கள் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan