Yvelines : காவல்துறை வீரர் மீது கத்திக்குத்து தாக்குதல்..!

9 ஆடி 2024 செவ்வாய் 06:50 | பார்வைகள் : 7910
ஆயுததாரி ஒருவர், காவல்துறை வீரர் ஒருவரை தாக்கியுள்ளார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 7, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் இச்சம்பவம் Yvelines மாவட்டத்தின் Bois-d'Arcy நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் நபர் ஒருவர் கத்தியுடன் சென்று அங்கிருப்பவர்களை அச்சுறுத்தியுள்ளார். அதையடுத்து காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
காவல்துறையினர் அவரைக் கைது செய்ய முற்பட்ட போது, அவர் காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். காவல்துறை வீரரின் நெற்றியில் இரும்பு கம்பி ஒன்றினால் தாக்கியுள்ளார்.
பின்னர் குறித்த நபர் காவல்துறையினரால் பாய்ந்து மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் 56 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது. அவரும், காயமடைந்த காவல்துறையினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025