Paristamil Navigation Paristamil advert login

தொடங்கும் கல்வியாண்டில் அவதானம் இல்லாத பெற்றோருக்கு 30€ அபராதம்.

தொடங்கும் கல்வியாண்டில் அவதானம் இல்லாத பெற்றோருக்கு 30€ அபராதம்.

9 ஆடி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 5799


சிறுவர்கள், பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின், அவதானம் இல்லாத பெற்றோருக்கு 30€ அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு நகரசபையில் அதிக அங்கிகாரம் கிடைத்துள்ள நிலையில் வரும் கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து அனைத்து பாடசாலைகளிலும் இதனை கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டு பெற்றோருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மழலையர்கள், சிறுவர்களின் பாடசாலை முடிந்ததும் பல பெற்றோர்கள் முன்கூட்டியே அறிவிக்காமல் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்ல குறித்த நேரத்திற்கு வருவதில்லை, இதனால் மாணவர்களை 'Centre de Loisirs' எனும் காப்பகத்தில் வைத்து பராமரிக்க வேண்டிய நிலையுள்ளது, இது நகரசபைக்கு பெரும் பணச் செலவை ஏற்படுத்துகிறது, அத்தோடு மாணவர்களும் களைப்படைகின்றனர் இதனை கட்டுப்படுத்தவே அவ்வாறான பெற்றோருக்கு அபராதம் விதிக்க தாம் முடிவு செய்துள்ளதாக நகரசபை தெரிவித்துள்ளது.

நகரசபையின் குறித்த முடிவில் பல பெற்றோர்கள் அதிதிருப்தி அடைந்துள்ளனர் "இது பெற்றோர்கள் மீது திணிக்கப்படும் பாரம்" என்றும் "மூன்று தடவைகளுக்கு மேல் தாமதமாக வருபவர்களிடம் வேண்டும் என்றால் அபராதம் விதிக்கலாம்" என்றும் "இது கல்வி அமைச்சு எடுக்காத முடிவு, நகரசபைக்கு அதிகாரம் இல்லை" என்றும் தங்களின் அதிதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

அதிகப்படியாக தாமதமாக வரும் பெற்றோர்களை  கொண்ட நகரமாக Toulouse நகரம் இருப்பதனால் அங்கிருந்து குறித்த நடைமுறையை ஆரம்பிக்க நகரசைகள் முடிவெடுத்துள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்