இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாம்பவான் சனத் ஜெயசூரியா நியமனம்

9 ஆடி 2024 செவ்வாய் 08:13 | பார்வைகள் : 3174
இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் சனத் ஜெயசூரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
August மாதம் இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.
இந்த நிலையில் இலங்கை ஜாம்பவான் வீரர் சனத் ஜெயசூரியா (Sanath Jayasuriya) இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இலங்கை அணியின் முழுநேர 'கிரிக்கெட் ஆலோசகராக' உள்ள ஜெயசூரியாவின் புதிய நியமனம் உடனடியாக அமுலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வா கூறுகையில், ''நாங்கள் ஒரு நிரந்தர தீர்வைக் காணும் வரை, சனத் தனது சர்வதேச கிரிக்கெட் அனுபவத்தின் செல்வத்தை தேசிய அணிக்கு வழிகாட்டும் வகையில் சிறப்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ளார்'' என தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடியும் வரை ஜெயசூரியா இந்த பதவியில் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.