Paristamil Navigation Paristamil advert login

ரூ.125 கோடி பரிசுத் தொகையை பெற்ற இந்திய அணி

ரூ.125 கோடி பரிசுத் தொகையை பெற்ற இந்திய அணி

9 ஆடி 2024 செவ்வாய் 08:19 | பார்வைகள் : 1130


உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்ட பரிசு தொகையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு வழங்கப்பட்ட பங்கு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருபதுக்கு 20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

ICC போட்டியின் முதல் இறுதிப் போட்டியில் விளையாடிய தென்னாப்பிரிக்கா, ஹென்ரிச் கிளாசனின் 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்ததன் காரணமாக வெற்றி பெற ஒரு பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது.

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு தொகையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இதில் வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வுக்குழு உள்ளிட்டோருக்கு எவ்வளவு ரூபாய் பிரித்து வழங்கப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

விராட் கோலி, ரோஹித் சர்மாவை உள்ளிட்டோரைக் கொண்ட 15 பேர் அணிக்கும் தலைமை பயிற்சியாளர் டிராவிட்டிற்கும் தலா ரூ. 5 கோடி வழங்கப்படும். 

பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப், பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோருக்கு தலா ரூ. 2.50 கோடி வழங்கப்படும்.

அஜித் அகர்கர் உள்பட தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்படும்.

உதவி பணியாளர்களான 3 பிசியோதெரபிஸ்டுகள் உள்பட 8 பேருக்கு தலா ரூ. 2 கோடி வழங்கப்படும்.

ரிசர்வ் செய்து வைக்கப்பட்ட வீரர்களுக்கு, அதாவது சிங், சுப்மன் கில், ஆகேஷ் கான், கலீல் அகமது ஆகியோருக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும்.


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்