Paristamil Navigation Paristamil advert login

"நாட்டில் எதுவும் நடக்காதது போல் செயல்படுகிறார் Emmanuel Macron" எழுந்தது குற்றச் சாட்டுக்கள்.

9 ஆடி 2024 செவ்வாய் 11:15 | பார்வைகள் : 4753


நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்று முடிவடைந்திருக்கும் நிலையில், எதிர்பார்க்காத விதமாக இடதுசாரிகள் அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ள நிலையிலும். அரசு தலைவர்  இந்த நாட்டில் எதுவும் நடக்காதது போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான சில நிமிடங்களிலே நாட்டு மக்களுக்கு நிலைமையை கூறி உரையாற்றிய அரச தலைவர், எடுத்ததற்கு எல்லாம் தொலைக்காட்சி உரையை நிகழ்த்தும் அவர் "ஏன் இப்போது மௌனம் காக்கிறார்" என மக்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022 ஆண்டு நடந்த தேர்தலில் பெரும்பான்மை பெறாத  தனது கட்சியை ஆட்சியமமைக்க வலதுசாரி கட்சியின் துணையோடு அழைத்த  அரசதலைவர், கடந்த தேர்தலில் Nouveau Front Populaire கட்சியினரும் வாக்களித்து இடதுசாரிகளின் பலத்தை நிருபித்த மக்களின் மனோநிலையை மதிக்காது செயல்படுகிறார் எனவும் மக்கள் அதிதிருப்த்தியை வெளியிட்டு வருகின்றனர்.

அரசதலைவரின் கட்சியில் போட்டியிட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் துடைத்து எறியப்பட்ட நிலை நிலவும் நிலையில், தீவிர வலதுசாரிகள், தீவிர இடதுசாரிகள் யாரையும் பிரதமராக ஏற்கமாடோம் என அவரின் சகாக்கள் தொடர்ந்தும் கூறிவருகின்றனர். தனது தனிப்பட்ட அரசியல் காலம் வரும் 2027 முடிவுக்கு வரும் நிலையில், அதிகார தோரணையில் Emmanuel Macron செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

 நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பிரதமரின் பதவி விலகல் கடிதத்தை நிராகரித்து சிலகாலம் இதே அரசை தொடருமாறு அறிவித்ததாக பிரதமர் Gabriel Attal (அவரின் சின்னத் தம்பி) அறிவித்தாரே தவிர, அரசதலைவர் நாட்டு மக்களை சந்திக்கவே இல்லை. பலர் தங்கள் விடுமுறையை ஒதுக்கி வைத்து தேர்தலில் வாக்களித்திருக்கும் நிலையில் அதிகப்படியான வாக்காளர்கள் இந்த தேர்தலில் பங்கு எடுத்திருக்கிறார்கள் என்ற நிலையில் அவர்களுக்கு அரச தலைவர் சரியான நிலமையை அறிவிக்க வேண்டும் என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்