யாழில். மரணச்சடங்குக்கு சென்று விட்டு வீடு திரும்பியவர் மரணம்

9 ஆடி 2024 செவ்வாய் 13:24 | பார்வைகள் : 5663
யாழ்ப்பாணத்தில் மரண சடங்கில் கலந்து கொண்டு விட்டு , வீடு திரும்பிக்கொண்டிருந்தவர் விபத்தில் சிக்கி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி அல்வாய் கிழக்கை சேர்ந்த சுப்பிரமணியம் சிவபாதசுந்தரம் (வயது 79) என்பவரே உயிரிழந்துள்ளார்
பருத்தித்துறை பகுதியில் கடந்த 05ஆம் திகதி தனது மைத்துனரின் மரண சடங்கில் கலந்து கொண்டு , தகன கிரியைக்காக சூப்பர் மட மயானத்திற்கு சென்று விட்டு , தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது வியாபாரி மூலை பகுதியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானர்.
விபத்தில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1