EURO 24 - ஸ்பெயினிடம் தோற்று வெளியேறியது பிரான்ஸ்..!!
10 ஆடி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 15780
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற EURO 24 கிண்ணத்தின் பரபரப்பான அரை இறுதியில் ஸ்பெயினிடம் தோற்று பிரான்ஸ் வெளியேறியுள்ளது.
2-1 எனும் கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோற்றது பிரான்ஸ். முதலாவது கோலினை பிரெஞ்சு அணியின் R. Kolo Muani எட்டாவது நிமிடத்தில் பெற்றுக்கொடுக்க ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். 12 வருடங்களுக்கு முன்னர் இறுதியாக EURO கிண்ணத்தை பிரான்ஸ் பெற்றிருந்தது. அதை அடுத்து இவ்வருடம் பிரான்ஸ் மீண்டும் அக்கிண்ணத்தை தட்டிப்பறிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த கனவில் மண் அள்ளி போட்டனர் ஸ்பெயின் வீரர்கள்.
21 ஆவது நிமிடத்திலும் 25 ஆவது நிமிடத்திலும் என 4 நிமிட இடைவெளியில் இரண்டு கோல்களை அடித்து வயிற்றில் புளியைக் கரைத்தனர்.
முதலாவது கோலினை Lamine Yamal, 21 ஆவது நிமிடத்திலும் இரண்டாவது கோலினை Dani Olmo, 25 ஆவது நிமிடத்திலும் ஆகிய இருவரும் அடித்தனர்.
அதன் பின்னர் பிரான்சின் முயற்சிகள் அனைத்தையும் தவிடுபொடியாக மாற்றியது ஸ்பெயின்.
ஆட்டத்தின் முடிவில், பிரான்ஸ் தோல்வியடைந்து EURO கிண்ண போட்டிகளில் இருந்து வெளியேறியது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan