Paristamil Navigation Paristamil advert login

 பிரித்தானியாவின் புதிய பிரதமர் வெளியிட்டுள்ள திட்டம்

 பிரித்தானியாவின் புதிய பிரதமர் வெளியிட்டுள்ள திட்டம்

10 ஆடி 2024 புதன் 08:49 | பார்வைகள் : 2570


பிரித்தானியாவின் புதிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் ராணுவத்தில் மாற்றங்கள் செய்ய திட்டமிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் புடின் போன்றவர்களால் நாட்டுக்கு அச்சுறுத்தல் நிலவும் நிலையில், பிரித்தானிய ராணுவத்தில் மீளாய்வு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போரைத்தொடர்ந்து, புடின் எந்த நாட்டின் மீது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், உலக நாடுகள் பல தங்கள் ராணுவத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

அவ்வகையில், பிரித்தானியாவும் தனது ராணுவத்தில் மாற்றங்கள் செய்ய திட்டமிட்டுள்ளது.

பிரித்தானியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் பாதுகாப்பைவிட தனக்கு முக்கியமான பணி எதுவும் இல்லை என்று கூறியுள்ள ஸ்டார்மர், நமக்கு நாட்டிலும் வெளியிலும் பல அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன.

நான் நம்மை பாதுகாத்துக்கொள்வதை உறுதிசெய்தாகவேண்டும். ஆகவே, ராணுவத்தை உடனடியாக மீளாய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்