Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் காசா போர்களால் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள அச்சம்

உக்ரைன் காசா போர்களால் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள அச்சம்

11 ஆடி 2024 வியாழன் 07:44 | பார்வைகள் : 1072


உக்ரைன் மற்றும் காசா போர்கள், உலக மக்களின் எண்ணங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 

அமைதியாக வாழ்ந்த பல நாடுகள், எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தில், இப்போது தங்கள் ராணுவங்களை வலுப்படுத்தும் முயற்சிகளைத் ஆரம்பித்துள்ளார்கள்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு ஒன்று, சுவிட்சர்லாந்து மக்களில் பெரும்பாலானோருக்கு போர் குறித்த அச்சம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஆகவே, சுவிட்சர்லாந்து நேட்டோ அமைப்புடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்வதை சுவிஸ் மக்கள் வரவேற்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள ETH பல்கலை மேற்கொண்ட ஆய்வுகள், உக்ரைன் மற்றும் காசா போர் காரணமாக, பெரும்பாலான சுவிஸ் மக்கள் எதிர்காலம் குறித்த நேர்மறை உணர்வற்றவர்களாக உள்ளனர் என்கின்றன.

ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிக்கு பாதி பேர், சுவிட்சர்லாந்து நேட்டோ அமைப்புடன் நல்ல உறவுகள் வைத்துக்கொள்ளவேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளது.

உலகில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக, எந்த அளவுக்கு சுவிஸ் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்