Paristamil Navigation Paristamil advert login

யூரோ கிண்ணம்- நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து

யூரோ கிண்ணம்- நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து

11 ஆடி 2024 வியாழன் 07:50 | பார்வைகள் : 815


யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. 

Signal Iduna Park மைதானத்தில் நடந்த Euro 2024 இரண்டாவது அரையிறுதியில், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே நெதர்லாந்தின் சேவி சைமன்ஸ் (Xavi Simons) கோல் அடித்து இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு 15வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அணித்தலைவர் ஹரி கேன் (Harry Kane) கோலாக (18வது நிமிடம்) மாற்றினார்.  

இதனால் முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் வெற்றி கோலை அடிக்க இரு அணி வீரர்களும் போராடினர். 

ஒரு வழியாக 90வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் ஓலி வாட்கின்ஸ் (Ollie Watkins) கோல் அடித்தார்.

பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் மேற்கொண்டு கோல் விழாததால், இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது.   

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்