வரும் செப்டம்பர் வரை பிரதமராக Gabriel Attal தொடரட்டும். மேல்சபை தலைவர். Gérard Larcher
11 ஆடி 2024 வியாழன் 09:22 | பார்வைகள் : 3694
பிரான்சில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது முடிவுகள் வெளியாகி நான்கு நாட்கள் கடந்த நிலையில், அரசதலைவர் பெரும்பான்மையை தேடுங்கள் என கடிதம் எழுதியதை கட்சிகளும், அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் விமர்சித்து வரும் நிலையில், சட்டங்கள், மற்றும் அரசியல் முடிவுகளை அங்கிகரிக்கும் அதிகாரம் உள்ள பிரான்ஸ் மேல்சபையின் தலைவர் Gérard Larcher "இன்றைய பிரதமர் Gabriel Attal அவர்களே வரும் செப்டம்பர் வரை பிரதமராக தொடரவேண்டும்" என தெரிவித்துள்ளார்.
அரசதலைவரின் கடிதம் வெளியாகும் முன்னர் தலைவர் மாளிகையில் Emmanuel Macron அவர்களைச் சந்தித்து தனது வேண்கோளை முன்வைத்ததாக Gérard Larche மேலும் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கு உலகை வரவேற்கும் முக்கியமான காலகட்டத்தை உணர்ந்து செயல்படுமாறும், அதேவேளை பெரும்பான்மை பெறாத கட்சிகளின் மூலம் ஆட்சி அமைத்து இந்த காலகட்டத்தை கடக்க வேண்டாம், அதேபோல் பெரும்பான்மை பெறாத கட்சிகள் தமக்குள் உறுதியான தன்மையை உருவாக்கும் வரை காத்திருக்கும் படியும் தான் கேட்டுக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
"பெரும்பான்மை இல்லை, பெரும்பான்மையையே உருவாக்க கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை, பிரதமர் யார் என அவர்களால் கூட தெரிவு செய்ய முடியவில்லை இந்த நிலையில் இப்போது இருக்கும் Gabriel Attal தலைமையிலான நாடாளுமன்றமும், அமைச்சரவையும் செப்டம்பர் வரை தொடர்வதே நாட்டின் சிறந்த வழி " என இன்று BFM தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேல்சபை தலைவர் Gérard Larcher திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.