இல்-து-பிரான்ஸ் உட்பட வடமேற்கு பிராந்தியங்களின் வீதிகளில் நெருக்கடி.. சிவப்பு எச்சரிக்கை!
11 ஆடி 2024 வியாழன் 11:54 | பார்வைகள் : 2632
நாளை ஜூலை 12, வெள்ளிக்கிழமை இல் து பிரான்ஸ் உட்பட நாட்டின் வடமேற்கு பிராந்தியங்களின் வீதிகளில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் விடுமுறைக்குச் செல்பவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படியும், வெளிச்செல்லும் வீதிகள் (Departs) இந்த நெருக்கடியை சந்திக்கும் எனவும், குறிப்பாக இல் து பிரான்சுக்குள் நாளை நண்பகல் முதலே இந்த நெருக்கடி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Paris - Lille நகரங்களை இணைக்கும் A1 வீதி நண்பகல் முதல் இரவு 8 மணி வரையும்,
Paris - Caen நகரங்களை இணைக்கும் A13 வீதி மாலை 5 மணி முதல் 7 மணி வரையும்,
Lyon - Marseille நகரங்களை இணைக்கும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் நெருக்கடியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.