வஞ்சரம் மீன் குழம்பு
12 ஆடி 2024 வெள்ளி 12:08 | பார்வைகள் : 829
மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. மேலும், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பேட்டி ஆசிட்களான(Fatty Acid) ஒமேகா (Omega 3) உள்ளது. இதனால், உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகும்.
தேவையான பொருட்கள் :
மீனை ஊறவைக்க
வஞ்சரம் மீன் - 1 கிலோ.
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்.
உப்பு - 1.1/2 ஸ்பூன்.
மிளகாய் தூள் - 3 ஸ்பூன்.
வஞ்சரம் மீன் குழம்பு செய்ய
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்.
கடுகு - 1 ஸ்பூன்.
வெந்தயம் - 1/2 ஸ்பூன்.
சின்ன வெங்காயம் - 30 நறுக்கியது.
முழு சின்ன வெங்காயம் - 15.
பூண்டு - 15 பற்கள்.
பச்சை மிளகாய் - 3 கீறியது.
கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்து.
இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்.
தக்காளி - 4 நறுக்கியது.
கல் உப்பு - 1 ஸ்பூன்.
மிளகாய் தூள் - 3 ஸ்பூன்.
தனியா தூள் - 3 ஸ்பூன்.
கெட்டியான புளி கரைசல் - 1 கப்.
தண்ணீர் - 2 கப்
கொத்தமல்லி - தேவையான அளவு.
செய்முறை :
முதலில், ரெசிபி செய்ய எடுத்து வைத்துள்ள மீனை கல் உப்பு சேர்த்து நன்றாக சுத்தவும் செய்யவும்.
பின்னர், சுத்தம் செய்து வைத்த மீனில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
மண் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம் சேர்க்கவும்.
பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், முழு சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை 10 நிமிடம் வதக்கவும்.
பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு கல் உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
கெட்டியான புளி கரைசல் சேர்த்து கலந்துவிட்டு, தண்ணீர் ஊட்டி கலந்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
பின்பு ஊறவைத்த மீன் துண்டுகளை சேர்க்கவும். பாத்திரத்தை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் அட்டகாசமான வஞ்சரம் மீன் குழம்பு தயார்!!